• Jul 25 2025

இதயத்தில் 95வீதம் அடைப்பு.. பேச முடியாமல் தவிக்கும் நடிகை சுஸ்மிதா சென்னின் தற்போதைய நிலமை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இதனையறிந்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் துடித்துப் போயுள்ளனர்.


இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் லைவில் வந்த சுஷ்மிதா சென் தொண்டையில் வைரல் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருப்பதால் சரியாக பேச முடியாவிட்டாலும் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "எனக்கு நிறைய அன்பு உங்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. என் வீடு முழுக்க பூக்களாக இருக்கிறது. அனைத்து கண்டங்களில் இருந்தும் எனக்கு அதிகளவான அன்பு கிடைத்திருக்கிறது" எனக் கூறியுள்ளார்.


மேலும் "மக்கள் எனக்காக பலவாறு பிரார்த்தனை செய்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக உள்ளது. அதற்காக நான் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நான் நலமாக இருக்கிறேன். குரல் மட்டும் தான் எனக்கு சரியாக இல்லை. வைரல் பிரச்சனையின் காரணமாகத் தான் எனக்கு உடம்புக்கு சரியில்லை என நினைக்க வேண்டாம். நான் இப்போது ரொம்ப ரொம்ப நலமாக இருக்கிறேன்" என்றார்.


அதுமட்டுமல்லாது "இந்த வைரல் சரியாகட்டும் என காத்திருந்தால் உங்களை பார்க்க பல நாட்கள் ஆரும். அதனால் தான் தற்போதே நான் உங்களிடம் நேரடியாக பேசுகிறேன். எனக்கு சாதாரண மாரடைப்பு இல்லை. என் இதயத் தமனியில் 95 சதவீத அடைப்பு இருந்தது. அதில் இருந்து நான் பிழைத்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறேன். நான் இன்று உயிருடன் இருப்பதற்கு நானாவதி மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் தான் முக்கிய காரணம்" என்றார்.


மேலும் "மொத்த ஐசியு குழுவுடன் சேர்ந்து என் உயிரை காப்பாற்றிய நானாவதி மருத்துவமனையின் ஐசியு பிரிவு தலைவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்த செய்தியை அவர்கள் யாரும் இதுவரை வெளியே சொல்லவில்லை. நான் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருவதை வெளியே சொல்லக் கூடாது என்று மட்டும் தான் கோரிக்கை விடுத்தேன். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்" என மிகவும் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார் நடிகை சுஸ்மிதா சென்.

Advertisement

Advertisement