• Jul 26 2025

கடும் குளிரில் தவித்த ஆதரவற்ற மக்களுக்கு உதவிகளை வழங்கிய நடிகை டாப்ஸி- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை டாப்ஸி.மாடலிங் துறையில் இருந்த டாப்ஸி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார்.

 இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டும் அல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டாப்ஸி தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், கடும் குளிரில் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு இவர் உதவி செய்திருக்கிறார்.


வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கடும் பனி பெய்துவருகிறது. குறிப்பாக டெல்லியில் வழக்கத்தை விட அதிகமாக பனி பெய்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், ஆதவற்ற மற்றும் சாலையோரம் வசிப்பவர்கள் பனி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹேம்குந்த் எனும் அறக்கட்டளை சார்பாக ஆதரவற்ற மக்களுக்கு போர்வைகள் மற்றும் குளிர் பாதுகாப்பு பொருட்கள் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளன.


இந்த திட்டத்தில் இணைந்துள்ள நடிகை டாப்ஸி தன்னார்வலர்களோடு இணைந்து ஆதரவற்ற மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கி இருக்கிறார். ஹேம்குந்த் அறக்கட்டளையைச் சேர்ந்த சமூக சேவகர் ஹர்தீரத் சிங், டெல்லியில் உள்ள கனாட் பிளேஸில் தானும் டாப்சியும் அங்குள்ள வீடற்ற மக்களுக்கு போர்வைகளை வழங்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில், டாப்ஸி மக்களுக்கு குளிர் பாதுகாப்பு உடைகளை வழங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் டாப்ஸியின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர்.


Advertisement

Advertisement