• Jul 23 2025

நடிகை திரிஷா வேண்டாம் ..மில்க் பியூட்டியை தட்டித் தூக்கிய அஜித் - விடாமுயற்சி லேட்டஸ் அப்டேட்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விஷயங்கள் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போகிறது.

 

ஆனால், கண்டிப்பாக அடுத்த மாதம் துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், நடிகை திரிஷாவால் தற்போது இப்படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம்.

மற்ற படங்களுக்கு கொடுத்துள்ள கால்ஷீட் காரணமாக விடாமுயற்சி படத்தில் நடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த படங்களை முடித்துவிட்டு விடாமுயற்சியில் இணைந்துகொள்கிறேன் என திரிஷா கேட்டுள்ளார்.

ஆனால், அதற்குள் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என்பதினால் திரிஷாவிற்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்க வைக்கலாம் என அஜித் கூறியுள்ளார். 

அந்தவகையில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை தமன்னாவை இந்த ரோலில் நடிக்க வைக்கலாம் என அஜித் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement