• Jul 25 2025

நடிகை த்ரிஷா சொன்ன குட்நியூஸ் -20 ஆண்டுகளை கடந்துள்ளாரா?- வாவ் எவ்ளோ அழகு!- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

1983ம் ஆண்டு மே 4ம் தேதி பிறந்த நடிகை தான் த்ரிஷா. தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து  'சாமி', 'லேசா லேசா', 'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆறு' மற்றும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் நடித்த குந்தவை கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இதனை அடுத்து இப்படத்தின் பாகம் இரண்டிலும் இவர் நடித்துள்ளார்.


முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிலம்பரசன் ஆகியோருடன் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் சினிமாவிற்கு வந்து 20 ஆண்டினைப் பூர்த்தி செய்ததாக கூறியுள்ளார்.20 இயர்ஸ் த்ரிஷா விருதுடன் நடிகை த்ரிஷா எடுத்துக் கொண்ட க்யூட்டான போட்டோக்களை பதிவிட்டுள்ளார்


இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருவதோடு நயன்தாரா, ஹன்சிகா எல்லாம் திருமணம் செய்து கொண்ட நிலையில், த்ரிஷாவும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



Advertisement

Advertisement