• Jul 24 2025

நடிகை த்ரிஷா இந்த நடிகருடன் லிவிங் டு கெதரில் இருந்தாங்களா...வெளியான தகவல்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அமீர் இயக்கிய மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, 20 ஆண்டுகளில் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக சரியான கேரக்டர் அமையாமல் லைம் லைட்டில் இல்லாமல் இருந்தார் த்ரிஷா. ஆனால், கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம், தற்போது ரிலீஸாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 இரண்டுமே த்ரிஷாவுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்தது. குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷா தனது பேரழகால் ரசிகர்களை திணறடித்திருந்தார்.


பொன்னியின் செல்வனில் மாஸ் காட்டிய த்ரிஷாவுக்கு விஜய்யின் லியோ படத்தில் நாயகியாகும் வாய்ப்புக் கிடைத்தது. விஜய்யின் ஆல்டைம் ஃபேவரைட் நாயகியான த்ரிஷா, லியோவில் இணைந்துள்ளதால் ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை த்ரிஷாவிடம், திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது,

30 வயதுக்கு மேல்தான் வாழ்க்கையில் ஒரு தெளிவு வருகின்றது. அதற்குப் பின்பு ஒரு துணையை தேடுவதுதான் சரியானது. அதாவது எனது நண்பர்களில் பலர் திருமணம் செய்துகொண்டு கஷ்டப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.


மேலும் இதில் நடிகர் ராணாவும் த்ரிஷாவும் லிவிங் டு கெதரில் இருந்ததாகவும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்ததாகவும் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகின்றது.


Advertisement

Advertisement