• Jul 26 2025

தற்கொலை செய்த நடிகை துனிஷா சர்மாவின் இறுதிச் சடங்கில் பங்கு கொண்ட அவரின் தாயாருக்கு ஏற்பட்ட சோகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலைசெய்துகொண்டார் . அது கொலை என போஸ்ட் மார்ட்டம் செய்த நபர் அளித்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்றும் நம்பப்படுகின்றது.

இதனை அடுத்து சமீபத்தில் 20 வயதே ஆன ஹிந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா சமீபத்தில் அவரது கேரவனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரை காதலித்து ஏமாற்றியதாக காதலன் ஷீசன் கான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

 அவர் மீது ஐபிசி 306ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. லவ் ஜிகாத் தான் காரணம் என புகார் எழுந்திருக்கும் நிலையில் அது பற்றியும் விசாரணை நடக்கிறது.


இந்நிலையில் இன்று துனிஷா ஷர்மாவின் இறுதி சடங்கு நடைபெற்றது. அதில் துனிஷாவின் அம்மா மயக்கமடைந்து விழுந்திருக்கிறார். அவரை மற்றவர்கள் காருக்கு தூக்கி வந்திருக்கிறார்கள். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement