• Jul 26 2025

மறுமணம் செய்து 46 வயதில் குழந்தை பெற்ற நடிகை ஊர்வசி- தற்போதைய நிலை ..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகில்  கதாநாயகி, குணச்சித்திர வேடம், காமெடி என நிறைய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்  தான் நடிகை ஊர்வசி.

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள இவர் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல பணிகளை சிறப்பாக செய்துள்ளார்.

அத்தோடு நடிகை ஊர்வசி கடந்த 2000வது ஆண்டில் பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

 இருவருக்கும் ஒரு மகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகள் பிரிந்தே வாழ்ந்தார்கள்.

2008ல் விவாகரத்து பெற்றனர். அத்தோடு 2013ம் ஆண்டு நடிகை ஊர்வசி சென்னையை சேர்ந்த பில்டரான சிவபிரசாத் என்பவரை தனது 45-ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்து 2014ம் ஆண்டு தனது 46 வயதில் ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.








Advertisement

Advertisement