• Jul 27 2025

ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை வந்தனா-எந்த தொடரில் தெரியுமா..?

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் இருக்கும் வரவேற்ப்பை போல சின்னத்திரையிலும் நடிகர்களைப் போல நடிகைகளுக்கும் வரவேற்ப்பு கிடைத்து விடுகின்றது.அந்த வகையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வந்தனா மைக்கேல். புகழ்பெற்ற சீரியலான ஆனந்தம் சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார்.

இதையடுத்து வம்சம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் முதன்முறையாக வில்லியாக தோன்றி ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகையாக திகழ்ந்தார். ஏனென்றால் அவரின் வில்லி கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த சீரியலுக்கு பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். இந்த சீரியல்கள்அனைத்திலும் வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதனால் சீரியல்களில் வில்லி என்றாலே ஞாபகத்தில் வருவது வந்தனா தான்.

இப்படி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்த வந்தனா, சொந்த காரணங்களால் கொஞ்ச காலம் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் சிறிய இடைவேளைக்கு பின்னர் மீண்டும் நடிகை வந்தனா நடிக்க வந்துள்ளார்.

சன் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் மகராசி சீரியல்களில் ரசிகர்களின் பேவரைட் கதாபாத்திரமான வில்லி ரோலில் தோன்றிவுள்ளார். மேலும் வந்தனாவின் சீரியல் என்ட்ரி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement