• Jul 24 2025

நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்ட மகிழ்ச்சித் தகவல்..! குவியும் வாழ்த்துக்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து தன்னுடைய அறிமுகப்படமான போடா போடியில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்த வரலட்சுமி, விஜய், விஷால் ஆகியோருக்கு வில்லியாக நடித்து அதிரடி காட்டியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

 38 வயதான வரலட்சுமி சரத்குமார், இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. மாறாக தன்னுடைய திரைப்பயணத்திலும், குடும்பத்தினருடன் நேரம் செலவிழிப்பதிலும் அதிகமாக விருப்பம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் 50 படங்களை முடித்துள்ளதற்கு ஆசிர்வதிக்கப்பட்டதாக கூறியுள்ள அவர், இதற்கான தன்னுடைய பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

தன்னுடைய டீமிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் என்றும் கூறியுள்ளார். இன்னும் அதிகமான ஆண்டுகள், அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்றும் ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement