• Jul 25 2025

பிரபல நடிகரின் மகனுடன் இரவு நேரங்களில் ஊர் சுற்றும் நடிகை யாஷிகா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 இல் பங்கு கொண்டதன் பின்னரே அனைவரிடமும் மிகவும் பிரபல்யமானார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மகத்தின் காதல் வலையில் சிக்கி சில சர்ச்சைகளையும் சந்தித்தார். அத்தோடு அண்மையில் தனது தோழியுடன் காரில் பயணித்த போது இவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் சில காயங்களுக்கு உள்ளானார்.

தற்பொழுது பூரண குணமடைந்த இவர் சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். 

தற்போது கிளாமரில் போட்டோஷூட்டை வாரி வழங்கி வரும் யாஷிகா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் டேட்டிங்கில் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது.

அத்தோடு பிரபல தொலைக்காட்சி நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான உமாபதி ராமையாவுடன் யாஷிகா இரவு நேரங்களில் ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனை தம்பி ராமையா பலமுறை கண்டித்து விட்டிருக்கிறார். எனினும் அதை மீறியும் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தொடர்பில் இருந்து வந்ததால் யாஷிகாவிடம் பிரச்சனை செய்துள்ளார்.

இதனை கேள்விப்பட்ட யாஷிகாவிற்கு தெரிந்தவர்கள் சொந்த மகனை வளர்க்க முடியவில்லை யாஷிகாவிடம் சண்டை போடுறீங்க என்று திட்டியும் வருகிறார்களாம்.

அத்தோடு யாஷிகா ஏற்கனவே, நிரூப்புடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.




Advertisement

Advertisement