• Jul 25 2025

நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் ..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் கொடுத்த சம்பவம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.


தமிழ் சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருபவர் தான் யாஷிகா ஆனந்த். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் எனலாம். இந்த நிகழ்ச்சியில் சீசன் 2இல் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.

அத்தோடு இந்த நிகழ்ச்சியில் நடிகர் மகத்துடன் காதல் வயப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மாமல்லபுரத்தில் 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெரிய கார் விபத்தில் சிக்கி இருந்தார்.அதன் போது  அவரின் தோழியும் உயிரிழந்துள்ளார்.


அந்த வழக்கு தொடர்பாக மார்ச் 21ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஆஜராக தவறியதால் பிடிவாரண்ட் பிறப்பித்து  தற்போது உத்தரவு போட்டுள்ளது.


ஏப்ரல் 25-ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்தை ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement