• Jul 25 2025

2022ல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகைகள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பெரும்பாலும் நட்சத்திரங்கள் சினிமாவில் இடைவிடாது நடித்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையாலும் சில நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெருவார்கள். மேலும் அந்தவகையில் இந்த ஆண்டு அரியவகை நோயால் பாதிகப்பட்ட நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்...


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்தது முதல் பல பிரச்சனைகளையும் சந்தித்து வந்தார். இதனால் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். எனினும் தற்போது அந்த சிகிச்சைக்காக தென் கொரிய நாட்டிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.


தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை பூனம் கவுர். பல ஆண்டுகளாக ஃபைப்ரோமயால்ஜியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் கூறினார்.


கோ, ஏகன், கோவா, சட்டம் ஒரு இருட்டறை போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை பியா பாஜ்பேய். சமந்தாவை போன்று இவருக்கும் மயோசிடிஸ் நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்தோடு காலில் வீக்கம் ஏற்பட்டதை சாதாரணமாக விட்டுவிட்டேன். அதன் மறுநாளில் இருந்து வீக்கம் அதிகமாகி வலி ஏற்பட்டது. பின் தசை அலர்ஜி நோய் இருப்பது கண்டிபிடித்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை சமந்தாவின் நிலை எனக்கு வந்தப்பின் தான் அந்த வலியை உணர்ந்தேன். அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்றும் பியா பாஜ்பேய் கூறியிருந்தார்.


தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஹம்சா நந்தினி.மேலும்  இவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement