• Jul 25 2025

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகும் முதல் போட்டியாளர்.. அட இவரா.. கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியானது இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. அதில் முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். அதேபோன்று இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டிலை வென்றிருந்தனர். 


இந்த மூன்று சீசன்களின் அமோக வெற்றிக்கு பின்னர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆனது ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் ஸ்ருஷ்டி டாங்கே, காலயன், ஷெரின், விசித்திரா, ராஜ அய்யப்பா, விஷால் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


மேலும் இந்நிகழ்ச்சியானது இரு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் சுற்று ஆகும். இருப்பினும் இது ரசிகர்களுக்கு சற்றுக் கவலையாகவும் இருக்கின்றது. ஏனெனில் நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரத்திலேயே எலிமினேஷன் வந்துள்ளமையே காரணமாகும்.


இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஷெரின், காலயன் மற்றும் கிஷோர் இவர்கள் மூவரில் ஒருவர் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகிறார்கள்.

இம் மூன்று போட்டியாளர்களிலும் காலயன் மற்றும் ஷெரின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள போட்டியாளர்களாக இருக்கும் பட்சத்தில் இயக்குநர் கிஷோர் தான் இந்தவாரம் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. உண்மை நிலவரம் என்ன என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement