• Jul 24 2025

அடப் பாவிங்களா.. கையைத் தொட்டதும் கர்ப்பமா... 'மாரி' சீரியலை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று 'மாரி'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலானது  கடந்த 2022 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பாக தொடங்கி தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. மேலும் ஜீ பங்களா டிவியில் ஒளிபரப்பான Trinayani என்ற சீரியலின் ரீமேக் தான் மாரி சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜீ தமிழில் ரஜினி சீரியல் முடிவுக்கு வந்ததிலிருந்து மாரி சீரியல் 45 நிமிடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் தேவயானி முத்துப்பேச்சியாக என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் மாரி கோவில் திருவிழாக்காக சூர்யாவுடன் இணைந்து சமயபுரம் வந்துள்ளார்.

இந்த நிலையில் மாரியின் வீட்டில் சூர்யா மற்றும் மாரிக்கு முதல் இரவு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் நேற்றைய எபிசோடு சூர்யா மாரியின் உடைய கையை பிடிக்க அடுத்த சீனில் மாரி கர்ப்பமாக வருவது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.


இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் "அடேய் அவன் கைய தான பிடிச்சான், அதுக்குள்ள கர்ப்பமா" எனக் கேட்டு கிண்டலாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement