தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் அனுஷ்கா ஷெட்டி. அந்தவகையில் ஆரம்பத்தில் நிறைய காதல் படங்களில் நடித்து வந்த அனுஷ்கா இடையில் தனது ரூட்டை மாற்றி பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் நடிக்கத் தொடங்கினார்.
இவ்வாறாக நல்ல கதைக்களம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து சாதிக்க பல நாயகிகளும் இவரை போல கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினர். அந்தவகையில் அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமடித போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
இவ்வாறாக திரைப்படங்களின் மூலம் வெற்றிக் கொடி நாட்டி வந்த அனுஷ்கா சில காலம் தமிழில் படங்கள் நடிக்காமல் இருந்தார். இருப்பினும் தற்போது அவர் நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படம் உருவாகி வருகின்றது.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகியுள்ளது. அதாவது விஜய்யுடன் அவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற “என் உச்சி மண்டையிலே” பாடலை அவர் பாடி அசத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ..!
Listen News!