• Jul 26 2025

அடேங்கப்பா.. அருண் பாண்டியனுக்கு இப்படி ஒரு அழகிய குடும்பமா.. இணையத்தைக் கலக்கும் பாமிலி புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோக்களின் வரிசையில் முக்கியமான இடத்தை பிடித்திருந்த ஒருவர் தான் அருண் பாண்டியன். இவர் 1985ஆம் ஆண்டு 'சிதம்பர ரகசியம்' என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 


அந்தக்கயில் 'ஊமை விழிகள், இணைந்த கைகள்' போன்ற படங்களில் ஆக்‌ஷனில் அதிரடி காட்டி சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். மேலும் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் சினிமாவிலும் அவருடைய பானியை பின்பற்றினார். அத்தோடு அருண் பாண்டியன் சிறந்த நடிகர் மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஒருவராகவும் வலம் வருகின்றார்.


அருண் பாண்டியனைத் தொடர்ந்து அவரின் மகள் கீர்த்தி பாண்டியனும் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கின்றார். இந்நிலையில் அருண் பாண்டியனின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement