• Jul 26 2025

அடேங்கப்பா... சந்தானத்தின் பிள்ளைகளா இவங்க..? எவ்வளவு அழகாக இருக்காங்க பாருங்க...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரைப்படங்களில் காமெடிக்குப் பேர் போன நடிகர் என்றால் அது நம்ம சந்தானம் தான். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியின் 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். 


அதனைத் தொடர்ந்து இவர் 2004 இல் 'மன்மதன்' என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது தற்போது ஹீரோவாகவும் மாறி பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'குலு குலு' என்ற திரைப்படம் ஆனது ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து இவருடைய நடிப்பில் தற்போது 'ஏஜென்ட் கண்ணாயிரம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து சந்தானத்தின் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இவ்வாறாக தன்னுடைய நகைச்சுவைத் திறன் வாய்ந்த நடிப்பின் மூலமாக பல ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டுள்ள இவர் உஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்திருக்கின்றார். இவர்களுக்கு தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில் சந்தானத்தின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதோடு அவரின் மகள் மற்றும் மகனினதும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.


Advertisement

Advertisement