• Jul 24 2025

ஆதி நடிப்பில் அடுத்த படம் தயார்... மிரட்டலாக வெளிவரவிருக்கும் "சப்தம்" திரைப்படம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

"சப்தம்" திரைப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர் நாடகமாகும். இத்திரைப்படத்தினை இயக்குனர் அறிவழகன் இயக்குகிறார். ஆதி பினிசெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த பரபரப்பான த்ரில்லரில் நடிகை லைலா  அவர்களும் நடிக்கிறார். 


மேலும் முன்னனி நடிகை சிம்ரன் மற்றும் லஷ்மிமேனன் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்க்கு  இசை அமைப்பாளர் தமன் எஸ் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைத்துள்ளார்.


தலைப்பின் அடிப்படையில் இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர் நாடகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இது பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும்.


 தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்படவுள்ளது. முன்னுரமாக  " சப்தம்" திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில் தற்போது அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் " சப்தம்"  திரைப்படம் திரைக்குவரவிருக்கிறது. 


Advertisement

Advertisement