• Jul 23 2025

சரவணனிடம் சண்டை போட்ட சந்தியா-ஜெசிக்கு ஆதி கொடுத்த அதிர்ச்சி- ராஜா ராணி எப்பிஷோட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி ஜெசியை ஹாஸ்பிடலுக்கு கூட்டி வந்திருக்க இதுக்கு ஏகப்பட்ட செலவு ஆகுது, இதெல்லாம் எனக்கு தேவைதான் இதுக்குத்தான் கல்யாணம் வேண்டாம்னு அடிச்சுக்கிட்டேன் யார் என் பேச்சை கேட்டா என பேச ஜெசி ஆதியிடம் நீ எல்லாம் ஒரு மனுஷனா என சண்டை போடுகிறார்.

அடுத்து வீட்டில் இரவு 7 மணி ஆனதும் சரவணன் சந்தியா என இருவரும் ஒரே நேரத்தில் போன் ட்ரை பண்ண பிறகு சந்தியா சரவணனுக்கு ஃபோன் பண்ணி இவ்வளவு நேரம் யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்க என சத்தம் போட சரவணன் கொஞ்ச நேரம் கலாய்த்து பேசிவிட்டு போன் பண்ணா போன் எடுங்க இல்லைனா ஒரு வேலையும் ஓட மாட்டுது என சொல்ல சும்மா இருந்தா அப்படித்தான் உங்களுக்கு ஒரு வேலை தரேன் என விடுகதை ஒன்றை கூறுகிறார்.


அதாவது மூணு பொண்ணுக்கு ஒரே முகம் ஒரு பொண்ணு ஆத்துல இன்னொரு பொண்ணு காட்டுல இன்னொரு பொண்ணு வீட்டில அது என்ன என கேட்டு நாளைக்கு போன் பண்ணும் போது இதுக்கு பதில் சொல்லணும் என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் சந்தியா பிராக்டிஸில் நடந்த விஷயங்களை சொல்ல நீங்க அந்தப் பொண்ண தூக்கிட்டு ஓடாமல் ஓடி இருந்தா நிச்சயம் இரண்டாவது மூணாவது ஆளாக கூட வந்திருக்கலாம் என சொல்ல சந்தியா தனியாக ஓடிப் பார்க்க முடிவு செய்கிறார்.

இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஜோதியின் உதவியுடன் ஓடி வர அப்துல் எடுத்துக் கொண்ட அதே அளவு நேரத்தில் வந்திருப்பதை பார்த்து இருவரும் ஆச்சரியப்படுகின்றனர். பின்னர் இந்த பக்கம் சரவணன் சந்தியா கேட்ட விடுகதைக்கு பதில் என்ன என குழம்பிக் கொண்டிருக்க அப்போது மயிலு மற்றும் ஜெசி வர இருவரிடமும் பதில் கேட்க அவர்களுக்கும் தெரியாமல் முழிக்கின்றனர்.


பிறகு கடையில் சக்கரையிடம் கேட்க அவன் கொஞ்ச நேரத்தில் யோசித்து ஒரு பதிலை சொல்ல சரவணன் சூப்பர் என கூறுகிறார். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement