• Jul 24 2025

சிவகார்த்திகேயனிடம் சண்டை போட்ட அதிதி... ஸ்டூடியோவில் நடந்த சம்பவம்... வெளியான வீடியோவால் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக ஒரே மாதிரியான கதையை தேர்வு செய்து நடிக்காமல் வித்தியாசமான கதைக்களம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடித்து வருகின்றார்.அந்த வகையில், இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'


இப்படத்தினுடைய இரண்டாம் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து நேற்றைய தினம் அப்பாடலின் ப்ரோமோ வீடியோவை சிவகார்த்திகேயன் ஸ்டைலில் கலக்கலாக வெளியிட்டு இருந்தனர்.


குறித்த வீடியோவில் அதிதி சங்கரை பாடகி ஸ்ரேயா கோஷல் என்றும் சிவகார்த்திகேயனை பாடகர் சித்ஸ்ரீராம் என்றும் கூறி ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் வரவழைத்து இருக்கின்றார். பின்னர் உண்மையை அறிந்ததும் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனிடம் சண்டை போட்டுள்ளார். 

இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் "படத்தில் தான் அப்படி என்று பார்த்தால் பாட்டிலும் அப்படியா" எனக் கேட்டு கலாய்த்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement