• Jul 25 2025

விளம்பம் சூப்பர் அக்கா ஆனால் வொய்ஸ் தான் செட் ஆகல- வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் வாரம் தோறும், மற்ற சீரியல்களுக்கு டி.ஆர்.பி-இல் செம்ம டஃப் கொடுத்து வரும் சீரியல் என்றால், அது அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் எனலாம்.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதோடு ரசிகர் பட்டாளமும் உள்ளது. இந்த சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான், நடிகை ஹேமா ராஜ்குமார்.


சீரியல் மட்டும் இன்றி, யூ டியூப் ஒன்றையும் துவங்கி அதன் மூலம் தன்னை பற்றியும், சீரியல் குறித்தும், அவ்வப்போது வெளியிடங்களுக்கு செல்லும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்க்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் புது வருடத்தை முன்னிட்டு தீபம் விளக்கேற்றும் எண்ணெய் விளம்பரத்தில் நடித்த வீடியோவைப் பகிர்ந்து தனது புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement