• Jul 25 2025

நீண்ட நாளுக்கு பின்னர் ராஜா ராணி சீரியலில் இருந்த விலகிய காரணத்தை உடைத்த அர்ச்சனா- இது தான் பிரச்சினையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் ராஜ ராணி சீசன் 2. இதில் வில்லிக் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் அர்ச்சனா. இவர் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே சீரியலில் இருந்து விலகினார்.

இவர் நெக்கட்டிவ் ரோலில் நடித்து வந்ததால்  நெக்கட்டிவ் விமர்சனங்கள் அதிகளவு குவிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இவர் தற்பொழுது பேட்டியொன்றளித்துள்ளார்.


அதில் தான் சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை சொல்லி இருக்கின்றார். அதாவது நான் சீரியலில் 1 வருஷத்துக்கு மேலே பண்ணிட்டு இருந்தேன். ஆனால் எனக்கு வெளியில போய்  வேலை செய்யணும் என்று ஆசை அதனால் தான் சீரியலை விட்டு விலகினேன். சீரியலை விட்டு விலகிய பின்பு ஆல்பம் பாடல்கள் பண்ணிட்டு வாரேன்.

அதே மாதிரி சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றேன். பாட்டு பாடுகின்றேன். என்னுடைய உடம்பை ரொம்ப ஃபிட்டாக வைத்திருக்கின்றேன்.இப்பிடி நிறைய விஷயங்களில் கவனம் செலுத்திட்டு வருகின்றேன். சீரியலுக்குள்ளேயே 4,5 வருஷம் என்று போனால் அதுக்கு பிறகு வயசும் போய்டும் எப்பிடி நாம ஆசைப்பட்டதை செய்ய முடியும்.


பொதுவாகவே நாம என்ன பண்ணினாலும் தப்பா தான் சொல்லுவாங்க. அதை எல்லாம் யோசிக்க கூடாது நம்ம வேலையை செய்திட்டு போய்ட்டே இருக்கணும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement