• Jul 25 2025

ரொம்ப நாள் கழித்து நான் தியேட்டரில் சிரித்து சிரித்து படம் பார்த்தேன்- சொப்பன சுந்தரி படம் குறித்து விஜயகாந்தின் மகன் கூறிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  சொப்பன சுந்தரி திரைப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியது.இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல், KPY வன்னியரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர்.அம்மா, மாற்றுத் திறனாளி அக்கா, படுத்த படுக்கையாக கிடக்கும் அப்பா ஆகியோருடன் சுயமரியாதையுடன் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்துக்கு தங்க நகைக்கடை மூலமாக கார் ஒன்று பம்பர் பரிசாக அடிக்கிறது. இதை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் அபகரிக்க முயற்சிக்கிறார். 


அது ஏன்? இறுதியில் அந்த கார் யாருக்குச் சென்றது? என டார்க் காமெடி மற்றும் செண்டிமெண்ட் கலந்த ஜானரில் ஜனரஞ்சமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை செலிபிரிட்டிகள் பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் சொப்பன சுந்தரி திரைப்படத்தின் சிறப்புகாட்சியை பார்த்துவிட்டு, “சொப்பன சுந்தரி மிகவும் பொழுதுபோக்கான திரைப்படம். அனைத்துசாரர்களும் பார்க்கக்கூடிய குடும்ப திரைப்படமாக வந்துள்ளது.  ரொம்ப நாள் கழித்து நான் தியேட்டரில் சிரித்து சிரித்து பார்த்த படம் சொப்பன சுந்தரி.


படத்தில் வரும் தீபா அக்காவின் நகைச்சுவையான நடிப்பு இயல்பாக இருக்கிறது. முழு படமும் நகைச்சுவையுடன் இருக்கிறது. இயக்குநர் சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.


Advertisement

Advertisement