• Jul 25 2025

துல்கர் சல்மானைத் தொடர்ந்து.. மம்முட்டி குடும்பத்திலிருந்து மற்றுமோர் ஹீரோ அறிமுகம்... அடடே இவர் அவரைப் போலவே இருக்காரே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மம்முட்டி. இவர் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருப்பவர் என்றே சொல்லலாம். 


மம்முட்டியைத் தொடர்ந்து அவரின் மகனான துல்கர் சல்மானும் தற்போது சினிமாவில் அறிமுகமாகி உச்ச நடிகர் என்றளவிற்கு உயர்ந்து வருகின்றார். இவரையடுத்து தற்போது மம்முட்டி குடும்பத்தில் இருந்து இன்னொருவரும் ஹீரோவும் சினிமாவுக்குள் களமிறங்கி இருக்கிறார். 


அதாவது மம்முட்டியின் சகோதரி மகன் அஷ்கர் சவுதான் தான் தற்போது ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்தவகையில் DNA என்ற படத்தில் தான் அவர் நடிக்கிறார். இந்நிலையில் ஷூட்டிங் தொடங்கும் முன்பு மம்முட்டியிடம் அவர் ஆசீர்வாதம் பெற்று இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.


இந்நிலையில் அவரும் பார்க்க மம்முட்டி போலவே இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.  

Advertisement

Advertisement