• Jul 24 2025

நான் போனதுக்கு அப்புறம் அவளுக்கு Focus கம்மி ஆயிடுச்சு- ரச்சிதா குறித்து வெளிப்படையாக பேசிய ராபர்ட் மாஸ்டர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் கெஸ்டாக முதலில் அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.அவர்கள் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். 

 மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளனர். இதனை அடுத்து இன்று தற்போது தனலட்சுமியும் மணிகண்டனும்  சர்ப்ரைஸாக நுழைந்துள்ளார்.இவர்கள் இருவரும் என்ட்ரைி ஹவுஸ்மேட்டை மாத்திரம் அல்லாது ரசிகர்களையும் குஷிப்படுத்தியது.


இவ்வாறு பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருவது பார்வையாளர்களையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.இதனிடையே, ராபர்ட் மற்றும் மைனா நந்தினி ஆகியோரிடையே உரையாடல் தொடர்பான விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.

 முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ரச்சிதாவை தொந்தரவு செய்து கொண்டும், ஜாலியாக ஏதாவது பேசிக் கொண்டும் இருப்பார் ராபர்ட் மாஸ்டர். இதனிடையே, தற்போது ரச்சிதாவை பற்றி பேசும் ராபர்ட் மாஸ்டர், "நான் போனதுக்கு அப்புறம் அவளுக்கு Focus கம்மி ஆயிடுச்சு. அப்புறமா இப்போ அவ வெளியே போறதுக்கு 4 நாள் முன்னாடி விக்ரமன் கூட ரெண்டு பேரும் ஒரே கலர் டிரஸ் போட்டு கலாய்ச்சு போனது கொஞ்சம் Funஆ போச்சு" என தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து பேசும் மைனா நந்தினி, "நீங்க முன்னாடி சோஃபால இருந்து அப்படியே பாத்துட்டு இருப்பீங்க. அவ ஏதாவது பண்ணிட்டே இருப்பா. எங்களுக்கே அது Funஆ தான் இருந்துச்சு. தப்பா எதுவும் தெரியல. அப்படி தப்பா இருந்துச்சுன்னா அவளே உங்ககிட்ட சொல்லி இருப்பா. வெளிய ஒரு லவ் டிராக் போட்டு ஓடிட்டு இருந்தது தெரியாது" என தெரிவித்தார். தொடர்ந்து, அவர்கள் இருவரும் இன்னும் பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement