• Jul 25 2025

மணிமேகலையை அடுத்து.. 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறாரா ஷிவாங்கி..? கவலையில் ரசிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்று மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.


நிகழ்ச்சியானது இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தற்போது இதன் 4-ஆவது சீசனும் ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. 4வது சீசன் இப்போது 20 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது. ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்புடன் நகர்ந்த வண்ணம் இருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து விஜே விஷால் வெளியேற ஷிவாங்கியால் தான் அவர் வெளியேற்றப்பட்டார் என சில கமெண்டுகள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்தன. இதனையடுத்து ஷிவாங்கி இந்நிகழ்ச்சிக்காக நாங்கள் நிறைய உழைக்கிறோம், யாரும் சாதாரணமாக ஜெயிக்கவில்லை என பதிவு செய்திருந்தார்.


மேலும் தற்போது குக்வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து ஷிவாங்கியை வெளியேற அவரது அம்மா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறாராம், அதாவது அவர் இசைத்துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறாராம். இருப்பினும் ஷிவாங்கி தனது அம்மாவின் வற்புறுத்தலையும் மீறி தான் குக்வித் கோமாளியில் கலந்துகொண்டு வருகிறார் என கூறப்படுகிறது.


இவ்வாறான ஒரு நிலையில் எதிர்வரும் நாட்களில் அம்மாவின் ஆசைக்காக அவர் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்று ஷிவாங்கி தரப்பில் தெரிவிக்கிறார்களாம். ஏற்கெனவே மணிமேகலை வெளியேறிய நிலையில் ஷிவாங்கியும் வெளியேறப் போகின்றார் என்ற தகவலானது ரசிகர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கி உள்ளது.

Advertisement

Advertisement