• Jul 24 2025

ரித்திகாவைத் தொடர்ந்து Baakiyalakshmi சீரியலில் இருந்து விலகிய மற்றுமொரு நடிகை- அடக்கடவுளே..... இவரும் விலகிட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியா காலேஜிற்கு செல்வது பற்றியே அதிகம் சொல்வதால் கொஞ்சம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மேலும் இந்த சீரியலில் அடுத்ததாக ஜெனியின் வளைகாப்பு நடைபெறவுள்ளது. இதனால் அடுத்து என்ன பிரச்சினை நடக்கப்போகின்றது என்பதை அறிய எல்லோரும் ஆவலாக இருக்கின்றனர்.


அப்படியான நிலையில் அண்மையில் இந்த சீரியலில் இருந்து அமிர்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா சீரியலில் இருந்து விலகினார். அவர் பிக்பாஸிற்கு செல்லவுள்ளதால் தான் விலகியுள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றது.


இவரைத் தொடர்ந்து இந்த சீரியலில் செழியனுடன் ஆபிஸில் வேலை செய்பவராக நடித்து வந்தவரும் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை ரேமா நடித்து வருகின்றார். இவர்கள் இரண்டு பேரின் மாற்றம் இன்றைய தினம் எப்பிஷோட்டில் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement