• Jul 25 2025

மகன் திருமணத்திற்கு பின் நவரச நாயகன் கார்த்திக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

80, 90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகை கார்த்திக். 

இவர் நவரச நாயகன் என்ற பெயரோடு பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.இவ்வாறுஇருக்கையில் கார்த்திக் தற்போது சினிமாவில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

அப்பாவை போன்று மகன் கெளதம் கார்த்திக்கும் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வருவார் என்று கடல் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

எனினும் இதனையடுத்து அடுத்தடுத்த படங்கள் கெளதம் நடித்து சில தோல்விகளை சந்தித்து வந்தார்.

கடந்த ஆண்டு கீழே தடுக்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிபெற்று சிகிச்சையும் பெற்றார். அத்தோடு அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். 

சமீபத்தில் மகன் கெளதம் கார்த்தி - மஞ்சுமா மோகன் திருமணத்தில் கூட நிற்கமுடியாமல் கஷ்டப்பட்டு இருந்தார்.அந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

60 வயதை எட்டிய கார்த்திக், கீழே விழுந்த சமயத்தில் அதே காலில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு எலும்பில் விரிசல் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதை அவர் செய்யாமல் அதே வலியில் அவதிப்பட்டு வருகிறார். கூடிய சீக்கிரம் அவர் குணமாகிவிடவேண்டும் என்று பலர் வேண்டியும் வருகிறார்கள்.

Advertisement

Advertisement