• Jul 25 2025

விஜய், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினி- தில் ராஜு தான் தயாரிக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த ஓரிரு நாட்களாகவே ரவுண்டடித்து வரும் செய்திகளில் ஒன்று, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் தலைவரின் கடைசி படத்தை இயக்குகிறார் என்பது. பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் ஒருவரின் படத்தை புகழ்ந்து பாராட்டினால் கூட, ரஜினி தன்னுடைய அடுத்த படத்தை அந்த இயக்குநர் இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என செய்திகள் கிளம்பிவிடுவது வழக்கம்.

இப்படி பல இயக்குநர்கள் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என செய்திகள் வெளியாகி பின் அது வதந்தியாகவும் கடந்து போயுள்ளது. அந்த வகையில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கிறார் என்கிற செய்தும் பார்க்கப்பட்ட நிலையில், அலசி ஆராந்து விசாரித்தபோது... தான் இது வதந்தி இல்லை, உண்மை தான் என தெரியவந்துள்ளதாகவும், இப்படம் குறித்த வேலைகள் சீக்ரெட்டாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


இது ஒரு புறம் இருக்க ரஜினி தற்பொழுது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தனது ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ரஜினி தனது 171 படத்தை இயக்க பிரபல தெலுங்கு இயக்குநருக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது இயக்குநர் கே.எஸ் ரவீந்திரா இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தான் நடிக்கவுள்ளாராம்.


அதன்படி லோகேஷ் கனகராஜ் ரஜினியின் 172 படத்தை இயக்கவுள்ளதாகவும் பெரும்பாலும் இது தான் ரஜினியின் இறுதிப்படமாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு  வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement