• Jul 24 2025

மறுபடியும் அவளும் நானும்....பாக்கியாவை நினைத்து வேதனைப்படும் கோபி! எதனால் இந்த மாற்றம்?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியிலில் நடித்து வரும் கோபி பாக்கியாவை பேசியது குறித்து மிகவும் கவலையுடன் காணொளி வெளியிட்டுள்ளார்.

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடித்திருக்கும் கோபி ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நபராக இருந்து வந்தார்.

எனினும் குறித்த சீரியல் அனைத்து பெண்களையும் கவர்ந்துள்ள நிலையில், அன்றாடம் குடும்ப பெண்கள் சந்திக்கும் பிரச்சினையை வெளியே எடுத்துக் காட்டி வருகின்றது.

இதில் பாக்கியாவிற்கு கணவராக நடிக்கும் கோபி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த நிலையில், சமீபத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.


இதன் பின்பு இன்ஸ்டாகிராமில் மற்றொரு காணொளியினை வெளியிட்டு எனது தனிப்பட்ட பிரச்சினைய சரியானதால் மீண்டும் நான் சீரியலில் நடிக்க உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.

எனினும் தற்போது சோசியில் மீடியாவில்  மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் கோபி, அவ்வப்போது காணொளிகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில்  “அவளும் நானும் மறுபடியும் ” என்ற காப்சனை இட்டு பாக்கியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதுமட்டுமல்லாது இவர் வெளியிட்ட காணொளியில் தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்ற குரலைக் கூறி அதற்கான விளக்கத்தினை அளித்துள்ளார்.


அத்தோடு இதில் அவரது பிள்ளைகளால் ஏற்பட்ட உடம்பின் காயத்தினை காட்டி விளக்கம் அளித்த அவர், இறுதியில் நாவினால் சுட்ட வடு என்ற வரிக்கு பாக்கியாவை தான் பேசியதைக் குறித்து மன வேதனையுடன் விளக்கம் அளித்துள்ளார்.

ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த கோபி தற்போது இவரது புகைப்படங்கள், காணொளிகள் மூலம் உண்மையான குணத்தை மக்களுக்கு காட்டி பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement