• Jul 24 2025

அட இல்லப்பா நம்புங்களேன் நான் ஆன்ட்டி கிடையாது- ரசிகர்களால் புலம்பித் தள்ளிய விஜே பார்வதி- அடப் பாவமே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனியார் யூடியூப் சேனலில் விஜேவாக இருந்து பிரபலமானவர் விஜே பார்வதி. ஷு தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கடைசியாக உள்ளே புகுந்து போட்டியாளர்களை கலாய்த்து விட்டு வந்தார்.

பிரபலங்களிடம் அந்தரங்க விஷயங்களை அசால்ட்டாக கேட்டுப் பேசும் திறமைக் கொண்ட இவர் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் முகத்தை காட்டாமல் கவர்ச்சி உடையில் செல்ஃபி ஒன்றை பதிவிட்டு தனது வயதையும் ரசிகர்கள் கேட்காமலே குறிப்பிட்டு இருந்தார்.


27 வயசு ஆகிறது என விஜே பார்வதி சொன்ன நிலையில், 2017ம் ஆண்டு உங்களுக்கு 27 வயசு ஆச்சு இப்போ எத்தனை வயசு என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்தனர். ஆன்ட்டி தானே நீங்க என்றும் 35 வயசு இருக்கும், என்னம்மா பொய் சொல்றீங்க 27 வயசுன்னு ஏகப்பட்ட ரசிகர்கள் பர்த்டே பேபி பாருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லாமல் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.


இந்நிலையில், அந்த கமெண்ட்டுகளை எல்லாம் பொறுமையாக படித்துப் பார்த்து கடுப்பான பார்வதி சத்தியமா சொல்றேன் எனக்கு 27 வயசு தான். ஹிப் ஹாப் தமிழாவுடன் இணைந்து ஆன்ட்டி போல பண்ணது தீயாக பரவிய நிலையில், பலரும் இதனை நம்பவில்லை என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும், என்னுடைய ஓவர் பேச்சின் காரணமாக நான் பெரிய பொண்ணுன்னு நினைச்சிட்டு இருக்கீங்க, அட இல்லப்பா நம்புங்களேன் என ரொம்பவே ஃபீல் செய்து புலம்பி உள்ளார் விஜே பார்வதி. அவரது இந்த ட்வீட்டையும் நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருவது தான் இதில் ஹைலைட்டான விஷயமே! என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement