• Jul 23 2025

அட அது எல்லாமே உண்மை தானா..? துணிவு படம் குறித்த முக்கிய வீடியோவை வெளியிட்டு நிரூபித்த நடிகர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகி இருந்தது.


இதில் துணிவு படமானது வெளியாகிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதாவது வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படமான இப்படம் இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.


இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சியில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் மற்றும் சில விஷயங்கள் VFX என கூறப்பட்டு வந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி அது உண்மை அல்ல என்பதை நிரூபித்துள்ளது.

அந்தவகையில் துணிவு படத்தில் ரவீந்தர் எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஸ்வநாத் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.


இதன்முலம் அவையாவும் VFX இல்லை, உண்மையாகவே காட்சியமைக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement