• Jul 24 2025

ஆஹா... சூப்பர் மேடம்- இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் போல இருக்கே- குத்தாட்டம் போட்ட நடிகை குஷ்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் தற்பொழுதும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது தவிர தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அவர் பட்டு சேலையுடன் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.தற்போது குஷ்பு டான்ஸ் ஆடி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கும் நிலையில் அது வைரல் ஆகி வருகிறது.


கன்னட நடிகர் ரவிச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்ல தான் இப்படி 52 வயதில் டான்ஸ் ஆடி இருக்கிறார் குஷ்பு. இந்த வீடியோ வைரலாகி வருவதோடு இன்னும் நீங்க 18 வயதுப் பொண்ணு மாதிரியே இருக்கிறீங்க என்று கூறி வருகின்றனர்.

மேலும் இன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  5-வது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement