• Jul 25 2025

ஆல்யா மானசாவையே மிஞ்சும் அளவுக்கு நடிப்பில் அசத்தும் ஐலா பாப்பா- வெளியாகிய கியூட்டான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற தொடரின் மூலமாக அறிமுகமானவர் ஆலியா மானசா.இவர் அதே சீரியலில் நடித்த சஞ்சீவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஸ் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும் ஆல்யா நடித்து வந்தார். பின்னர் இரண்டாவது முறை கர்பமாக இருந்ததினால் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்பொழுது சன்டிவியில் இனியா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.


அதே போல சஞ்சீவ் கயல் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.இருவரும் தமது பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்துப் பதிவிட்டும் வருகின்றனர். இந்த நிலையில்  instagram-க்கு ரீல்ஸ் செய்ய சொல்லி ஆலியா ஐலா குட்டிக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஐலாவும் அதை அப்படியே கேட்டு ஆலியா போல் நடித்துக் காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement