• Jul 23 2025

தன்னிடம் எவ்வளவு நகை இருந்திச்சு என்று ஐஸ்வர்யாவுக்கே தெரியவில்லையாம்- வடிவேலு காமெடியாகிப் போன புகார்- திடீரென ஏற்பட்ட திருப்பம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 60 சவரன் நகை தனது வீட்டில் கொள்ளை போயுள்ளதாக புகார் அளித்த நிலையில், போலீஸார் விசாரணையில் ஈஸ்வரி 100 சவரனுக்கும் மேல் கொள்ளையடித்து இருப்பது அம்பலமாகி உள்ளது.இதுதொடர்பாக  பேட்டி அளித்துள்ள பிரபல கிரைம் பத்திரிகையாளர் செல்வராஜ் 100 சவரன் நகைக்கும் மேல் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் மட்டுமின்றி ரஜினிகாந்த் வீட்டிலும் கைவரிசையை காட்டினாரா ஈஸ்வரி என்கிற கேள்வி எழுகிறது. அது தொடர்பான விசாரணையையும் போலீஸார் நடத்தி வருவதாக கூறுகிறார்.


கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பத்தில் பிரச்சனை நிலவி வந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கே வீட்டில் எத்தனை சவரன் நகை இருந்தது என்பதே சரியாக தெரியவில்லை என்றும் நகைகளுக்கான சரியான ரசிது உள்ளிட்ட விவரங்கள் அவரிடம் இல்லை. அதனால் தான் போலீஸார் சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண ஆல்பங்களை எடுத்துச் சென்று அதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ன என்ன நகைகளை போட்டிருக்கிறார் என ஆராய்ச்சி செய்து வருகின்றனர் எனக் கூறி உள்ளார்.


ஈஸ்வரி தான் தப்பிப்பதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என்பதை பயன்படுத்தி இருக்கிறாரா? அல்லது உண்மையிலேயே அவர் ஐஸ்வர்யாவின் பினாமியா என்றும் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர் என்றும் செல்வராஜ் கூறியுள்ளார்.

கணவர் தனுஷ் உடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல நாட்கள் வீட்டிலேயே தங்காமல் பாம்க்ரூவ் ஹோட்டலில் தனியாக தங்கி வந்தார் என்றும் வீட்டில் ஆளில்லாதது மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை சாதகமாக கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்த நிலையில், பல நாள் திருடி ஒரு நாள் மாட்டுவாள் என்பது போல சிக்கியிருக்கிறார் ஈஸ்வரி என்றும் அவருடன் சேர்ந்து டிரைவர் உள்ளிட்ட மூவர் இந்த வழக்கில் சிக்கி உள்ளனர் என்றும் கூறி உள்ளார்.


இத்தனை சவரன் நகைகளை லாக்கரில் சரியாக வைத்து அதன் சாவியை யாருக்கும் தெரியாமல் வைப்பது மற்றும் சிசிடிவிக்களை வைத்து கண்காணிக்காமல் விட்டது. எவ்வளவு நகைகளை ஈஸ்வரி தன்னிடம் இருந்து திருடினார். எதெல்லாம் தனது நகை என்கிற எந்த ஒரு தகவலையும் சரியாக போலீஸாருக்கு சொல்லாமல் இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் படங்களை இயக்கி வரும் இயக்குநர் இப்படி பொறுப்பு இல்லாமல் எப்படி இருந்தார் என்பதே பெரிய கேள்வியாக போலீஸாருக்கு எழுந்திருப்பதாக செல்வராஜ் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement