• Jul 24 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,தனுஷ் நடிப்பில் 3,கௌதம் கார்த்தி நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய 'முசாபிர் ஆல்பம்' சமீபத்தில் வெளியானது . ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக 'லால் சலாம்' படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி லால் சலாம் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், எதிர்காலத்தில் வெளிவர இருக்கும் போஸ்டர்களில் தனது பெயரை நீக்குவதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பூர்ணிமா ராமசாமி 2013 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து நடிகை ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களிலும் பூர்ணிமா பணிபுரிந்துள்ளார்.




Advertisement

Advertisement