• Jul 25 2025

விக்ரமின் கன்னத்தில் ஆசையாய் தடவிய ஐஸ்வர்யா ராய்- பார்க்க சகிக்காமல் திரும்பிய த்ரிஷா

stella / 2 years ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படமானது வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு பாகங்காக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இடம் பெறும் பொன்னி நதி பாடலை தளபதி விஜய் கூட அடிக்கடி பாடுவதாக சரத்குமார் அண்மையில் ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.


மேலும் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்வானது சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளில் மணிரத்னம், ஏ ஆர் ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தனர்.இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ராய், விக்ரம் கன்னத்தில் தடவியிருக்கிறார். அதைபார்த்து த்ரிஷா திரும்பியுள்ளார்.


அந்த வீடியோ தற்போது வெளியாகி எதற்கு ஐஸ்வர்யா ராய் விக்ரமிடம் இப்படி நடந்து கொண்டார் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.ஏற்கனவே இந்த நிகழ்வில் ஐஸ்வர்யாவைப் பற்றி விக்ரம் புகழ்ந்து தள்ளியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement