• Jul 24 2025

பிரபல நடிகருடன் காதல் உறவில் ஐஸ்வர்யா ராய்... மிரட்டல் விடுத்த முன்னாள் காதலன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'இருவர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்தியளவில் பல இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக இருந்து வந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இத்தம்பதியினருக்கு 2011 ஆம் ஆண்டு ஆராதரனா பச்சன் என்ற மகளொருவர் பிறந்தார். அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆவதற்கு முன் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் ஒரு சில நடிகர்களை காதலித்துள்ளார். 


இந்தப் பட்டியலில் நடிகர் சல்மான் கானும் ஒருவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் சல்மான் கானுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின் பிரபல நடிகர் விவேக் ஓப்ராய் என்பவரை ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்துள்ளாராம்.


இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய்யின் முன்னாள் காதலர் சல்மான் கான் நடிகர் விவேக் ஓப்ராய்யை கூப்பிட்டு ஐஸ்வர்யா ராய்யை காதலிக்க கூடாது எனக் கூறி மிரட்டியுள்ளாராம். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராயின் காதல் சர்ச்சைகள் குறித்த இந்த செய்தி படுவைரலானது என்றும் கூறுகிறார்கள்.


இவ்வாறு விவேக் ஓப்ராய் - ஐஸ்வர்யா ராய் இருவரும் காதலித்து வந்த நிலையில் சல்மான் கானின் மிரட்டலைத் தொடர்ந்து திடீரென இருவரும் காதலை தமது முறித்துக் கொண்டு பிரிந்துவிட்டார்களாம். இதன்பின் நடிகர் ரித்திக் ரோஷனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். இப்படி பல கிசு கிசுக்களைத் தாண்டித் தான் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். 

Advertisement

Advertisement