• Jul 25 2025

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ஃபர்ஹானா படத்தின் டீசர் ரிலீஸ்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வரம் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் . இவர் தற்பொழுது இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான  ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக  நடிகர் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். 

 இந்த படமானது இஸ்லாமிய பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றி நடக்கும் கதையாக மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஃபர்ஹானா படத்திற்கு, கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது வென்ற சாபு ஜோசப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். பிரபல கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். 

படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர்.  இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில், இப்படம் வரும் மே மாதம் 12 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement