• Jul 23 2025

தனது மகன்களுடன் CSK அணி விளையாடுவதைப் பார்க்க வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நேற்று CSK vs GT T20 qualifier 1 மேட்ச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் GT அணியை வீழ்த்தி நேரடியாக ஃபைனல் சுற்றுக்கு CSK தேர்வாகியுள்ளது. இதை CSK ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


இந்த போட்டியை நேரில் பார்க்க திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் சென்றிருந்தனர். அருள்நிதி, உதயநிதி, வரலக்ஷ்மி சரத்குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என பலரும் CSK நேரில் காண சென்றுள்ளனர்.


இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இரு மகன்களையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் கூட தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement