• Jul 23 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு- பரபரப்பில் திரையுலகம்- இத்தனை லட்சம் மதிப்புள்ள நகைகளா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்குநராக இருந்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்துள்ளார். 


 திருட்டு போன நகைகளில் டைமண்ட் மற்றும் தங்க நகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.பல லட்சம் மதிப்புள்ள இந்த நகைகளை அவர் வீட்டில் வேலை செய்யும் மூன்று நபர்கள் தான் திருடிருக்க முடியும் என கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்துள்ளார்புகார் அளித்ததன் பெயரில் தற்போது போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் எனும் திரைப்படத்தை தயாரித்து வருகின்றார். இப்படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement