• Jul 24 2025

நடுக்கடலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... 2-ஆவது திருமண சர்ச்சைக்கு மத்தியில்... திடீரென வைரலாகும் புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டமை நம் அனைவருக்கும் தெரியும். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக 2மகன்களுடனும் மிகவும் சந்தோசமாக வாழ்க்கை நடாத்தி வந்திருந்தனர்.


ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீரென இரண்டு பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சில வருடங்களுக்கு முன்னர் தாங்கள் இருவரும் பிரிவதாக தத்தமது சமூக வலைதள பக்கங்களின் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். 


இருப்பினும் முறைப்படி இன்றுவரை இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளாமலே தனித்தனியாக இருந்து வருகின்றனர். இதனையடுத்து சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இளம் நடிகர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது. அனால் இது உண்மையல்ல என நெருங்கிய வட்டாரங்களின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.


இவ்வாறான வதந்திகள் பரவி வரும் நிலையில் ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் அமெரிக்காவுக்கு சென்று நடுக்கடலில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement