• Jul 25 2025

முல்லை மறுத்தும் ஐஸ்வர்யா வீட்டுக்கு கதிரை அனுப்பி வைத்த தனம்- கண்ணனை போட்டு அடித்த ஆபீஷர்ஸ்- கடுப்பாகிய மூர்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது கண்ணனும் ஐஸ்வர்யாவும் வளைகாப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே ஐஸ்வர்யாவின் சித்தி வருகின்றார். அப்போது வட்டிக்கு கேட்ட மீதிப் பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். அத்தோடு யார் யாருக்கெல்லாம் வளைகாப்பு பற்றி சொல்லியிருக்கு என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்.


இதனை அடுத்து கதிர் மூர்த்தி, தனம், முல்லை ஆகியோர் இருக்கும் போது ஐஸ்வர்யாவின் வளைகாப்புக்கு போட கண்ணனுக்கு மோதிரம் வாங்கியுள்ளதாகவும் ஐஸ்வர்யாவுக்கு காப்பு வாங்கியுள்ளதாகவும் காட்டுகின்றார். இதனால் கடுப்பான மூர்த்தி கண்ணன் பயல் என்ன தான் பண்ணினாலும் எனக்கு எதுவும் சொல்லாத என்று சொல்கின்றார்.

மேலும் கணணன் வீட்டுக்குச் சென்று ஏதாவது வேணுமா என்று விசாரிச்சிட்டு வாறியா என்று தனம் கதிரை அனுப்ப, முல்லை அவரை அனுப்ப வேணாம் மாமாவை அனுப்புங்க.அந்த ஐஸ்வர்யா பொண்ணு பேசுற பேச்சுக்கு இவக அங்க போகணுமா என்று சொல்லவும் தனம் கதிர் போய்ட்டு வரட்டும் என்று சொல்ல முல்லை கோபமாக கிளம்பி செல்கின்றார்.


இதனை அடுத்து ஐஸ்வர்யா வீட்டில் கிரடிட் பணம் கட்டவில்லை என பாங்கில் வேலை செய்பவர்கள் காசு எப்போ கட்டுவீங்க என்று கேட்கின்றனர். மேலும் கண்ணன் இன்னும் இரண்டு நாளில் கட்டிடுவேன் என்று சொல்லவும் அவர்கள் ஐஸ்வர்யாவைக் கூட்டிட்டு போகட்டா என்று தவறாகப் பேச கண்ணன் அவர்களை அடித்து விடுகின்றார்.இதனால் அவர்களும் திரும்ப அடித்து விட்டுச் செல்கின்றனர்.இந்த நேரம் பார்த்து கதிர் வருகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement