• Jul 25 2025

ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலன் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.. பிரபலத்தின் மூலமாக வெளிவந்த ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டமை நம் அனைவருக்கும் தெரியும். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக 2மகன்களுடனும் மிகவும் சந்தோசமாக வாழ்க்கை நடாத்தி வந்திருந்தனர்.


ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீரென இரண்டு பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சில வருடங்களுக்கு முன்னர் தாங்கள் இருவரும் பிரிவதாக தத்தமது சமூக வலைதள பக்கங்களின் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். இருப்பினும் முறைப்படி இன்றுவரை இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளாமலே தனித்தனியாக இருந்து வருகின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் புதிய பூகம்பம் ஒன்றினைப் பற்ற வைத்திருக்கின்றார். அந்தவகையில் அவர் கூறுகையில் "தனுஷ் - ஐஸ்வர்யா காதல் விவகாரம் பூதாகரமானபோது பத்திரிகையாளர்களை அழைத்தார் ரஜினி. அப்போது என்ன விசேஷம் என்று கேட்டேன். அதற்கு அவர் உங்களுக்கு தெரியாததா?. தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் என்று பத்திரிகையாளர்கள்தான் எழுதினீர்கள். எனவே கஸ்தூரி ராஜாவிடம் பெண் எடுத்துக்கொள்ள சம்மதமா எனக்கேட்டேன். அவரும் ஒத்துக்கொண்டார். எனவே நீங்கள் எழுதியதை உண்மையாக்கிவிட்டேன்" என ரஜினி தன்னிடம் கூறியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது "தனுஷுக்கு முன்னதாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிம்புவை காதலித்தார். அதன் பிறகு அவர் பிரபல தொழிலதிபரின் மகனை காதலித்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். இந்தப் பிரச்னைகள் எல்லாவற்றையும் கடந்த பிறகும் தனுஷும் ஐஸ்வர்யாவும் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள்" எனவும் கூறி இருந்தார் பயில்வான் ரங்கநாதன்.


Advertisement

Advertisement