• Jul 25 2025

ஐஸ்வர்யாவின் தில்லாலங்கடி வேலையால் அபிராமியிடம் சிக்கிக் கொண்ட நிகிதா- தீபாவின் திருமணத்தில் நடக்க இருக்கும் குழப்பம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கார்த்திகை தீபம்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 ஐஸ்வர்யா நிகிதாவை பூஜை ரூம் அழைத்து சென்று அபிராமி அத்தைக்கு பூஜைல சாமி பாட்டு பாடுனா பிடிக்கும் அதனால நீ சாமி பாட்டு பாடு என்று ஐஸ்வர்யா சொல்ல நிகிதா எனக்கு சாமி பாட்டு பாட தெரியாது என்று சொல்கிறாள்.

உடனே ஐஸ்வர்யா நீ வாயசை நான் டேப்ல ஆன் பண்ற என்று சொல்லி taprecorder ஆன் பண்ண பக்தி பாட்டு பாடுவது அதற்கு நிகிதா வாய் அசைக்க அனைவரும் வந்து பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.


அப்போது அபிராமி வர அபிராமியும் பாட்டு நன்றாக பாடுவதாக சொல்லி பாராட்ட அப்போது மீனாட்சி அதை கவனித்து டேப் ரெக்கார்டரை ஆப் செய்ய நிகிதா மாட்டிக் கொள்கிறாள்.  அபிராமி சத்தம் போட ஐஸ்வர்யா சமாளித்து அவளுக்கு தொண்டை சரியில்லை அதனால்தான் சரியாக பாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு நிகிதா நன்றாக சமைப்பாள் என்று சொல்லி கிச்சனுக்கு அழைத்து செல்கிறாள்.

சிவா ஒரு மாப்பிள்ளையுடன் தீபாவை பெண் பார்க்க வர அப்பா அம்மா சந்தோஷப்படுகின்றனர். தீபா காப்பி கொடுக்க தீபாவிற்கு மாப்பிள்ளை பிடிக்க மாப்பிள்ளைக்கும் தீபாவை பிடித்து போய் சரி என்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

இதை தீபாவின் அண்ணி மைதிலி ராஜஸ்ரீக்கு போன் செய்து விசயத்தை சொல்ல ராஜஸ்ரீ கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement