• Jul 24 2025

ஐஸ்வர்யா வாங்கிய கடனை கேட்க முல்லை வீட்டுக்கு வந்த அவரது சித்தி- கடுப்பில் கிளம்பிய மூர்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மூர்த்தி ஐஸ்வர்யா எல்லா இடத்திலும் வீடியோ எடுத்திட்டு திரியுது.இந்தப் பொண்ணு செய்யிய வேலைகளைப் பார்த்தால் சிரிப்பா இருக்கு ஒரு இடம் விடாமல் எல்லா இடத்தையும் வீடியோ எடுத்திட்டு இருக்கு என்று சொல்லி நக்கலடிக்கின்றார்.


இதனை அடுத்து கயலிடம் ரைம்ஸ் சொல்லும்படி மீனா கேட்க கயல் பேசாமல் இருக்க மீனா அவரின் அம்மாவைத் திட்டுகின்றார். உன்னால் தான் இவளுக்கு நல்லா செல்லம் கூடிட்டு.இதனால தான் படிக்கிறாள் இல்லை என்று பேசுகின்றார். அந்த நேரம் ஜீவாவும் மாமனாரும் வந்திருக்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் கயலை வேற ஸ்கூலுக்கு மாத்தினால் நல்லம் என்று சொல்ல ஜீவா கயலை ஸ்கூல் எல்லாம் மாற்ற முடியாது என்கிறார்.

 இதனால் ஜீவாவை சமாளித்து விட்டு ஜனார்த்தனன் அந்த இடத்தை விட்டுச் செல்கின்றார். தொடர்ந்து ஐஸ்வர்யா என்ன பண்ணலாம் என யோசிக்க முல்லை வந்து திட்டுகின்றார். உனக்கு எப்போ என்ன செய்யிறது என்று தெரியாதா எனப் பேசுகின்றார். பின்பு ஐஸ்வர்யாவின் சித்தி தனம் வீட்டிட்டு வந்து ஐஸ்வர்யா பற்றி விசாரிக்கின்றார்.


சித்தி வந்திருப்பதை அறிந்த ஐஸ்வர்யாவும் கண்ணனும் அவரிடம் கடன் வாங்கிய விஷயம் பற்றி பேச வேண்டாம் என்று கண்ணால் சைகை காட்டுகின்றனர். பின்னர் தனியாக அழைத்து ஐஸ்வர்யா சித்தியைத் திட்டுகின்றார். அந்த நேரம் திடீரென முல்லை வருகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement