• Jul 24 2025

ஒரே ஷுட்டிங் ஸ்போட்டில் படப்பிடிப்பை நடத்தும் அஜித் மற்றும் ரஜினி- இது என்ன புது டுவிஸ்டா இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்க அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு.இப்படத்தில் கதாநாயகியாக  மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பானது ஐதராபாத், பாங்காக், விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடைபெற்றது.

இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ஹீரோ -வில்லன் என்ற இரட்டை கெட்டப்புகளில் அஜித் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவுள்ளது.


இப்படத்தில் இடம் பெற்ற சில்லா சில்லா என்ற பாடலின் சூட்டிங் இன்றைய தினம் சென்னையின் பிரபல சூட்டிங் ஸ்பாட்டில் நடத்தப்பட்டு வருகின்றது. அதே செட்டில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. 

இதனால் இருவரும் ஒரே இடத்தில் உள்ள நிலையில், இருவரும் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement