• Jul 23 2025

கண்ணீர் விட்டு அழுத அஜித்! விடாமுயற்சி படக்குழுவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல கலை இயக்குனரான மிலன் இன்று மாரடைப்பால் காலமானார். கலை இயக்குனர் சாபு சிரிலிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார் மிலன். 1999 ஆம் ஆண்டு சாபு சிரிலிடம் சேர்ந்த மிலான் சிட்டிசன், தமிழன், வில்லன், ரெட், அந்நியன் போன்ற படங்களில் பணியாற்றினார். பின்பு ஆர்யாவின் கலாப காதலன் படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமான மிலன் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வந்தார்.


பில்லா, ஏகன், வேலாயுதம் என தொடர்ந்து பெரிய படங்களாக பணியாற்றி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இந் நிலையில் விடாமுயற்சி படத்தில் கலை இயக்குனராக பணியாற்ற இணைந்த நிலையில்  திடீரென மாரடைப்பால்  மரணமடைந்துள்ளார். 


அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரமாண்டமாக நடந்து வரும் படம் விடா முயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் சில நாட்கள் எடுக்கப்பட்டது, தற்போது முக்கிய ஆக்‌ஷன் காட்சி ஒன்றை எடுக்கவுள்ளார்கள் .இந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பில் கலை இயக்குனர் மிலன் மாராடைப்பால் இறந்துள்ளார். இந்த தகவல் ஒட்டு மொத்த திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்., இவரின் இழப்பு  அஜித்தை உச்சக்கட சோகத்தில் ஆழ்த்தியுள்ளதும் குறிப்பிடதக்கது

Advertisement

Advertisement