• Jul 23 2025

அசல் பட நாயகியை விடாமல் துரத்திய அஜித். - நடந்த சம்பவம் குறித்து மனம் திறந்த நடிகை பாவனா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது.H வினோத் இயக்கிய இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.துணிவு படத்தில் நடித்த போது மஞ்சு வாரியர் மூலம் நடிகை பாவனாவை தொடர்புகொண்டு பேசியுள்ளார் அஜித்.

அதுகுறித்து நடிகை பாவனா தற்போது மிகவும் நெகிழ்ச்சியாக மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாவனாவிடம் "தமிழில் உங்க கடைசிப் படம் அசல், அதில் உடன் நடித்த அஜித்துடன் பேசுவது உண்டா" என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாவனா, அசல் படத்தை தன்னால் மறக்கவே முடியாது என்றுள்ளார். அசல் படத்தின் ஷூட்டிங் முழுவதும் மலேசியாவில் நடந்ததாகவும், அதில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அஜித் சார் தன்னிடம் அன்பாக பழகியதுடன் ரொம்பவே கேர் எடுத்து பார்த்துக்கொண்டார். தற்போது கூட துணிவு படத்தின் ஷூட்டிங்கில் மஞ்சு வாரியரிடம் தன்னைப் பற்றி அஜித் விசாரித்துள்ளார். தன்னிடம் பேச வேண்டும் என அஜித் கூறியதால், மஞ்சு வாரியர் எனக்கு போன் செய்துள்ளார். ஆனால் அப்போது என்னால் பேச முடியாமல் போனாலும், பின்னர் இன்னொருநாள் என்னிடம் அஜித் சார் சொன்னதை கூறினார்.

அப்போது நான் சென்னையில் இருந்ததால் உடனடியாக அஜித் சாருடன் போனில் பேசிவிட்டு நேரிலும் போய் சந்தித்தேன். அந்த சந்திப்பில் அஜித் சாருடன் நீண்டநேரம் மனம் விட்டு பேசியதாகவும் பாவனா கூறியுள்ளார். மேலும், அஜித், மஞ்சு வாரியர் ஆகியோருடன் பாவனாவும் ஒன்றாக சாப்பிட்டாராம். அஜித் சாரே என்னிடம் பேச வேண்டும் என ஆசைப் பட்டதும், அவரை சந்தித்ததும் வாழ்நாளில் மறக்கவே முடியாது என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement