• Sep 08 2025

லோகேஷ் கனகராஜை மோசமாகத் திட்டி வரும் அஜித் ரசிகர்கள்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சென்ஷேசன் இயக்குநராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார்.இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 

இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை அவர் தற்போது செய்து வருகிறார். இந்த படத்தை முடித்தபிறகு லோகேஷ் ரஜினியின் 171வது படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அஜித்தை ட்ரோல் செய்யும் வகையில் போடப்பட்ட வீடியோஒன்றை லோகேஷ் கனகராஜ் லைக் செய்து இருக்கிறார் என கூறப்படுகிறது.இதை பார்த்து அஜித் ரசிகர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் குறித்து கோபமாக விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement